திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி சென்னை அடையாறில் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் இல்லாத இந்தியா என்ற சிந்தனையே காங்கிரஸிடம் இல்லை. அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் மீதும் ஜனநாயகம் மீதும் மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.
பாஜகவில் இருக்க வேண்டும் என்றால் மரியாதைக்குறைவான உறவு முறையில் தான் இருக்க வேண்டும். அங்கு வேறு விதமான உறவு முறையே கிடையாது
பெரும் முதலாளிகள் நிர்வகிகும் நிறுவனங்களிடம் அடிமைப்பட்டு கிடக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. தான்தோன்றியத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் எதோச்சதிகாரப் போக்கிற்கு முடிவு கட்ட இந்த தேர்தல் மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமந்துள்ளது.
பிறப்பால் நான் தமிழன் அல்ல. ஆனால், தமிழர்களின் மனவலிமை எனக்கு நன்றாக புரிகிறது.
மத அரசியலை, மக்களைப் பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அதிமுக பாஜ., கூட்டணியை தமிழகத்தல் திமுக கூட்டணி நிச்சயம் முறியடிக்கும். இந்த தேர்தலின் மூலம் பாஜக., ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆணிவேர் வேரறுக்கப்படும்.
கடந்த தேர்தல்களைப் போல இந்த தேர்தலை எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல் கட்சிகள் தற்போது மோதவில்லை. அதிமுக, ஆர்எஸ்எஸ், மோடி, அமித்ஷாவுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது.
என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடு. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அசாம், எல்லா மாநிலங்களும் முக்கியம். அதன் பிராந்திய மொழிகளும் முக்கியம்.
தமிழகத்தில் தன்மான உணர்வு அதிகம். ஆனால், அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறது அதிமுக. அமித்ஷாவின் காலடியில் விழ வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு ஒரு போதும் இருக்க வேண்டியதில்லை. ஆனால், மக்களின் மனநிலைக்கு மாறாக, மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்துக்களை அதிகளவில் குவித்துள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமித்ஷாவின் காலடிகளில் விழுந்து கிடக்கிறார்.
அமித்ஷா காலில் விழாத கட்சியாக திமுக.வும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள். மே 2 ஆம்தேதி தேர்தல் முடிவு வெளியானவுடன் முக.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார்.
இந்த தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகும்போது, அதிமுக, மோடி, அமித்ஷா கூட்டணி தூள், தூள் ஆக்கப்படும். அதை நிறைவேற்றக் கூடிய சக்திதான் திமுக காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.