Sat. May 4th, 2024

ஐ2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த வகையில், மனித உரிமை மீறல் நடைபெற்றதாக கூறி இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என கோரி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானம் வெற்றிப் பெற்றுள்ளது. வழக்கம் போல, இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது.

சுவிட்சர்லாந்த் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் தற்போது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இதில், பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இலங்கை உள்நாட்டு போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை மீது விசாரணை நடத்த வலியுறுத்தி துர்மானம் ஒன்றை முன்மொழிந்தன.

இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும் என கனடா உள்ளிட்ட நாடுகள், ஐ.நா.சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளை கேட்டுக் கொண்டன. இதேபோல, இந்தியாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என திமுக, அதிமுக,மதிமுக உள்ளிட்ட அரசியல்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததையடுத்து, இந்த ர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது.

இந்தியா, பஹ்ரைன்,நேபாளம், ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்த போதும், தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன;

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், டென்மார்க், தென் கொரியா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.