Sat. Nov 23rd, 2024

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என ஊடகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் லயோலா கல்லூரி மாணவர்களும், புதிய தலைமுறையும் எடுத்த கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு

திமுக தனித்தே 140 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும், போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.

திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும், அடுத்த பத்து நாட்கள் பிரச்சாரத்தில் இந்த வித்தியாசம் பெரிதாகலாம் எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-140-150
அதிமுக-35-40
பாமக 06
பாஜக 02
நாம் தமிழர் 02
மநீம 02-04
அமமுக 08-12
காங்கிரஸ் 15-22
விசிக 04
மதிமுக 05
இடதுசாரிகள் 08
முஸ்லீக் கட்சி 03
பிறர் 05-08

புதிய தலைமுறை மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும் திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று தெரியவந்துள்ளது. .

Puthiya Thalaimurai Survey
DMK +: 151 – 158 Seats
AIADMK +: 76 – 83 Seats