Sat. Apr 19th, 2025

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த மண்ணில் பிரசாரத்தை தொடங்கம் அவர், வரும் வெள்ளிக்கிழமை வரை (19 ஆம்தேதி) சூறாவளி சுற்றுப்பயணம்மேற்கு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

சென்னையில் இன்று நண்பகல் திருவாரூர் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக, மு.க.ஸ்டாலின், 3 தடவையாக போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று காலை தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு திறந்து வேனில் வந்த அவருக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து உற்சாக வரவேற்புக் கொடுத்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். அவரின் சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு….