Sun. Apr 20th, 2025

ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், மாநகர காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, தியாகராயநகர் மற்றும் வடபழனியில் உளள முக்கியமான சாலைகளில், எல்லைப் பாதுகாப்பு படையினர், மாநகர காவல்துறை தியாகராயநகர் துணை ஆணையர் மற்றும் வடபழனி உதவி ஆணையர் தலைமையில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நம்பிக்கையளித்தனர்.