திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சென்னையில் இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் 117 ஆண் வேட்பாளர்கள் தனி மேடையிலும், 117 பெண்கள் தனி மேடையிலும் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்களின் கல்வித்தகுதியையும் அறிவித்தார்.
117 பெண் வேட்பாளர்களும் குறைந்த கல்வித் தகுதியாக இளங்கலை படித்தவர்களாக, விளிம்பு நிலை மக்களாகவே இருநதனர். அரசியலில் 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கே பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அரசியலில் 50 சதவிகிதம் பெண்களுக்கு வழங்கிய ஒரே அரசியல் கட்சி என்று இந்தியாவிலேயே புகழப்படும் அளவுக்கு சாதனை படைத்துள்ளார் சீமான்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை.
பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை.
அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்.
கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர்.
மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது. இவ்வாறு சீமான் உரையாற்றினார்.