ஊடகவியலாளர்/திரைப்பட இயக்குனர் எழில்பாரதி எழுதிய இரண்டு நூல்கள் வெளியிட்டு விழா…
வாசிப்பில் ஆர்வம் கொண்டோரே வாருங்கள்…
ஊடகவியலாளராக பத்தாண்டுகளுக்கு முன்பு பணியை தொடங்கிய எழில்பாரதி, பின்னர் திரைத்துறையில் கால் பதித்து கடின உழைப்பால் இயக்குனர் அந்தஸ்தை பெற்றார்..
ஆழ்ந்த வாசிப்பு திறனும் திறனாய்வு செய்யும் குணமும் இயல்பாய் கொண்ட இளைஞர் எழில்பாரதி எழுத்தாளராக பரிணாமித்திருக்கிறார்..
செம்பீரா எனும் சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பும் ஆயுதம் வைத்திருப்பவன் எனும் கவிதை த் தொகுப்பும் நூலாக வடித்துள்ளார்.
அதன் வெளியீட்டு விழா தி.நகர் சாதுல்லா சாலை தக்கர் பாபா கல்வி வளாகத்தில் உள்ள வினோபு அரங்கத்தில் நாளை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது..
விழாவில் நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற இயக்குனர் சேரன் இசைந்துள்ளார்…
முதல் பிரதியை தழுவிக்கொண்டு செவிகள்இனிக்க திறனாய்வு செய்கிறார் இயக்குனர் அமீர்..
வரவேற்புரை நிகழ்துகிறார் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.சினிவாசன்..
விழா தொகுப்புரையை ஏற்றிருக்கிறார், இந்து தமிழ் திசை நாளிதழ் ஊடகவியலாளர் ஆர்.சி.ஜெயந்தன், நன்றியுரை வழங்குகிறார் எழுத்தாளர் ஜீவா படைப்பகத்தின் கார்த்திக் புகழேந்தி..
வாருங்கள் வாசகர்களே..வாழ்த்துகள் நெஞ்சம் நெகிழ..
இலக்கியத்துறையில் இளைஞர்கள் கொடி பறக்கட்டும் உயர,உயர,,,,