தாரை இளமதி., சிறப்பு செய்தியாளர்
இன்றைய தேதியில் ஐயப்பனை பற்றி பாடல் பாடிய இசைவாணிக்கு எதிராக போராட்டங்கள் தலை காட்டி வருகின்றன..பெரும்பான்மையாக பக்தி முழக்கம் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது சிறுபான்மையாக தான் கடவுள் இல்லை என்ற குரலும் ஒலித்து வருகிறது. ஜனநாயகத்தில் அனைத்து தரப்பு கருத்துக்களுக்கும் உரிமையுண்டு என்பதை புரிந்துகொள்ளாத சிறு கூட்டம் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் காலம் காலமாக வன்முறையை தூண்டிவிட்டு கொண்டே இருக்கிறது. அதுவும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுயநலமாக இருந்தது பின்னர் அரசியல் ஆதாயமாக மாறிவிட்டது..
கடவுளும் மதமும் இருக்கிறது என்ற குரல் ஒலித்து கொண்டு இருந்தால் இரண்டுமே இல்லை என்ற குரலும் ஒலித்து கொண்டே தான் இருக்கும் ..இரண்டுக்கும் இடம் இருந்தால் தான் அது ஜனநாயகமாக இருக்கும். ஜனநாயகத்தில் சிறுபான்மையாக இருப்பது சாபக்கேடு …மதத்திற்கு மட்டுமல்ல, சாதிக்கும் இது பொருந்தும்…
புகழ் பெற்ற ஆன்மிக சொற்பொழிவாளர் திரு சுகிசிவம் கூட தற்போது பகுத்தறிவு பார்வையுடன் ஆன்மிக கருத்துக்களை முன்வைத்து வருகிறார்..இசைவாணிக்கு எந்தளவு எதிர்ப்பு எழுந்து இருக்கிறதோ அதைவிட பலமடங்கு அவருக்கும் இருந்து வருகிறது..உண்மையான ஆன்மிக பற்றாளர்கள் அலட்டிக்கொள்வது கொள்வது இல்லை ..அரசியல் ஆதாயம் பார்ப்பர்வர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள்.. பகுத்தறிவு எதிர்ப்பு அவர்களுக்கு வயிற்று பிழைப்பு ..
உண்மையாகவே மக்களை நேசிப்பவர்கள் நல்வழியை தான் போதிப்பார்கள் ..அந்த பாதை என்பது பக்குப்பட்டவர்களுக்கு தெளிவாக புலப்படும். எப்போதுமே சர்ச்சைகளில் சிக்காத முனைவர் வெ இறை அன்பு ஐஏஎஸ், ஒரே நேரத்தில் நவீன பெரியாராகவும் நவீனசித்தராகவும் வெளிப்பட்டு இருப்பதுதான் அற்புதம்..ஆச்சர்யமும் கூட ..
இறை அன்பு., மிகுந்த சிந்தனையாளர்.. ஆகச்சிறந்த மனிதநேயர், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்பது எல்லோருக்குமே தெரியும்..
அரசு பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் பணத்தின் மீதும் பதவியின் மீதும் தீராத காதல் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பதவிகளில் அமர்ந்து கொள்ளவே செய்கிறார்கள். ஆனால் ஓய்வு பெறும் நேரத்தில் இரண்டு வாய்ப்பு வந்தபோதும் உதறி எறிந்த போதே திரு வெ இறை அன்பு அவர்கள் 75 விழுக்காடு சித்தராக உருமாறிவிட்டார்..
மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் கூட வாழ்வின் கடமைகளை நிறைவேற்றிய பிறகும் கூட பணத்தின் மீதான ஆசை நீங்கவில்லை..இப்போது கூட ரியல் எஸ்டேட் வணிகர் மாதிரி பணம் இருந்தபோது நிலத்தை வாங்கி போடவில்லையே என்ற ஆதங்கத்தை பொது மேடைகளில் கூட வெளிப்படுத்தி கொன்டே இருக்கிறார். ஆனால் 33 ஆண்டு காலா அரசு பணியில் உச்ச பதவிகளில் இருந்த வெ இறை அன்பு ஐஏஎஸுக்கு சென்னையில் மட்டுமல்ல வேறு எங்கும் சொந்த வீடே (தனி வீடு ) இல்லை என்பது எவ்வளவு அதிர்ச்சியாகும்..பிறப்பின் உண்மையை முழுமையாக புரிந்து கொண்டு இருப்பதால்தான் வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக கற்பிக்க எஞ்சிய வாழ்வை அர்ப்பணித்து கொண்டு இருப்பதன் மூலம் முழுமையான சித்தராக உருமாறியிருக்கிறார் வெ இறை அன்பு ஐஏஎஸ்..
அதைவிட சிறப்பாக கடந்த சில மாதங்களாக மதம் தோன்றலின் பின்னணியை உலகளாவிய பார்வையோடு அறிவியல் ரீதியாக அவர் முன்னெடுத்த வைக்கும் ஆதாரங்கள். தந்தை பெரியாருக்கு கூட கைவராத ஞானமாகும்..என் வாழ்வில் அவர் கோவிலுக்கு சென்றதையோ வழிபாடு நடத்தியதையோ பார்த்ததே இல்லை ..
அவரின் எழுதும் பேச்சும் இளம்தலைமுறைக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுக்கும் என்றால் அவரின் சமீப கால வீடியோ மூலம் வெளிப்படும் பகுத்தறிவு கருத்துக்கள் தமிழ் சமுதாயத்தை மேலும் மேலும் பண்பட்ட சமுதாயகமாக உலக பரப்பில் அங்கீ காரம் பெற வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
வெ இறை அன்பு ஐஏஎஸ்ஸின் கடந்த கால எழுத்துக்களை வாசித்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட சொற்பொழிவுகளுக்கு செவி மடுத்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முகநூலில் பகிரப்பட்டு வரும் அவர் பேசிய வீடியோக்களை தேடி பார்த்து செவி கொடுங்கள் ..
ஆன்மிகம் நம்பிக்கை தரலாம் நிம்மதியை தரலாம் ஆனால் மனஉறுதியையும் திடத்தையும் பிறப்பின் புரிதலையும் தராது என்பது தெளிவாகும் …
https://www.facebook.com/share/r/14P3iUXcBo
https://www.facebook.com/share/v/17BrA1zXVj