Mon. Apr 29th, 2024

மாரிதாஸும், சாட்டை துரைமுருகனும் சவுக்கு சங்கரை நிர்வாணமாக்கி வெளுக்கிறார்களே..
ஊடகவியலாளர்கள் ஒன்றுசேர வேண்டிய நேரமிது…

தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

வயிற்றுப்பிழைப்புக்காக உடலை விற்பவர்களை விட மிகமிக மட்டமானவர் சவுக்கு சங்கர் என்று நல்லரசு பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஊடகவியலாளர் என்ற போர்வையில், கூலிக்கு மாரடிக்கும் சங்கருக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகிறவர்களின் பிறப்பை பற்றிகூட சந்தேகிக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நல்லரசுவின் வாதமாகும்.

சங்கரின் ஆரம்ப கால வாழ்க்கைப் பற்றியும், ஊடகவியாளராக அரிதாரம் பூசி, பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதையும் யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் என்பது வரை நல்லரசு யூ டியூப்பில் கடந்த ஆண்டே அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

சங்கர் முழுமையாக சோரம் போய், இரண்டு, மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன என்ற போதிலும் ஊரறிய, உலகறிய தான் சோரம் போனதை வெளிப்படுத்திய நிகழ்வாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேர்காணல் செய்த போது, சங்கரின் யோக்கியதை முழுமையாக அம்பலபட்டுவிட்டது. ஊடகவியலாளர் பெயரில் முழுமையான கிரிமினலாக நடமாடி வரும் சவுக்கு சங்கரைப் பற்றி, நேர்மையான ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் முழுமையாக உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

சங்கரின் மூகமுடியை முதன் முதலில் கிழித்து தொங்க போட்டவர் சத்தியம் டிவி நெறியாளர் முக்தார்தான். அவரைத் தொடர்ந்து, திராவிட சிந்தனையாளர்கள் பலர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சங்கரின் பிளாக்மெயில் அரசியலை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

பல ஆயிரம் பார்வையாளர்களைக் கொண்டிருந்த திராவிட சிந்தனையாளர்களின் எதிர்ப்புக்குரல் மூலம், சவுக்கு சங்கரின் அராஜகம் அதிகமாக அம்பலமாகவில்லை. ஆனால், லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட யூ டியூப் பிரபலங்களான மாரிதாஸ் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களாக சவுக்கு சங்கரை நிர்வாணமாக்கி, படுமோசமாக கேவலப்படுத்தி வருகிறார்கள்.
மானம்,ரோஷம் உள்ள ஒரு மனிதராக இருந்தால், சவுக்கு சங்கர் தற்கொலைதான் செய்து கொண்டிருக்க வேண்டும்.


ஊடகவியலாளர் என்ற போர்வையில் விஷக்கிருமியாக நடமாடி வரும் சவுக்கு சங்கரின் பெயரைக் கேட்டாலே, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.

அரசு நிர்வாகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனக்குறைவாக நடைபெறும் தவறுகளைக் கூட, பிளாக் மெயில் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளும் சங்கர், உயர் அதிகாரிகளின் கார் ஓட்டுநர், அலுவலக உதவியாளர்களின் உதவியோடு, நெல்முனையளவுகூட மனசாட்சியின்றி, அம்பலப்படுத்தி தன்னுடைய வயிற்றை கழுவிக் கொண்டு வருகிறார் சங்கர்.

நாட்டில் எத்தனையோ கழிச்சடைகள் நடமாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதில் ஒருவராக சங்கரைப் பற்றி நல்லரசுக்கு துளியும் கவலையில்லை. ஆனால், நேர்மையான ஊடகவியலாளராக, தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டு, ஊடகத்துறையை மட்டுமே முழு நேர வாழ்க்கையாக கொண்டிருக்கும் நேர்மையான ஊடகவியலாளர்களை கேவலப்படுத்தும் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சங்கருக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டியது நல்லரசுவின் கடமையாகும்.

மாரிதாஸும், சாட்டை துரைமுருகனும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் வேளையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்க துப்பில்லையா சங்கருக்கு என்பதுதான் நல்லரசுவின் கேள்வியாகும். தனிப்பட்ட வாழ்க்கையையும்,காவல்துறை பணியில் செய்த தில்லுமுல்லுகளையும் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறார்கள் மாரிதாஸும், சாட்டை துரைமுருகனும். தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் சில்வண்டுகளை வைத்து கீழ்த்தரமான காரியங்களை துணிந்தே செய்யும் சங்கர், கடந்த இரண்டு நாட்களாக மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு தான் பதில் இல்லை.

சாட்டை துரைமுருகனும், மாரிதாஸும் ஊடகவியலாளர் என்ற முகமூடியை அணிந்து கொள்ளாமல், யூ டியூப்பர் என்ற அடையாளத்தையே சுமந்து கொண்டு, பொதுமக்களிடம் நேர்மையான வழியில் செல்வாக்கு பெற்று வருகிறார்கள். ஆனால், சவுக்கு சங்கர், ஊடகவியலாளர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு செய்து வரும் பித்தலாட்டங்கள் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் அவமானத்தை தேடி தந்துகொண்டிருக்கும் வேளையில், அவருக்கு எதிராக துணிந்து களம் இறங்கியிருக்கும் மாரிதாஸையும், சாட்டை துரைமுருகனையும் முழுமனதோடு ஆதரிக்க வேண்டிய கடமை, ஊடகத்துறையை தவமாக செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் கடமையாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்லரசுவின் வேண்டுகோளாகும்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அராஜகத்திற்கு எதிராக குரல்கொடுத்த அறம் இணைய ஆசிரியர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்ட கொடுமையை பார்த்து, ஊடகவியாளர்கள் துடித்துக் கொண்டிருந்த வேளையில், காவல்துறைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சவுக்கு சங்கர்.
பாத்து பக்குவமா பல்லு படாம என்ற கேவலமான வார்த்தைகளை வெளிப்படுத்திய, தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலையை கண்டிக்காத சவுக்கு சங்கர், நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வனின் நேர்காணலை கிண்டல் செய்வதற்கு ஆர்வம் காட்டியவர்தான். அவரைப் பார்த்து இதே விமர்சனத்தை முன்வைப்பதற்கு எவ்வளவு நேரமாகும்? எஸ்.பி.வேலுமணியை நேர்காணல் செய்தபோது, பாத்து பக்குவமா… என்ற வகையில்தான் கேள்விகளை முன் வைத்தார் சவுக்கு சங்கர்.

நக்கீரன் ஆசிரியர், சபீர், பார்த்தீபன் என பிரபல ஊடகவியலாளர்கள் பலரை விமர்சனம் செய்த போது, அவருக்கு அறிமுகமான, தோள் கொடுத்த ஊடகவியலாளர்கள் பலரின் அறிவுரையை அலட்சியப்படுத்தி திமிராக நடந்து கொண்ட சவுக்கு சங்கருக்கு எதிராக அறச்சீற்றத்துடன் பொங்கிக் கொண்டிருக்கும் மாரிதாஸையும், சாட்டை துரைமுருகனையும் ஊடகத்துறையை வாழ்க்கையாக கொண்டிருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் ஒருங்கிணைந்து ஆதரவாக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது நல்லரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *