Fri. Nov 22nd, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

விருதுநகர் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வெடி விபத்து நேரிட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் எம் புதுப்பட்டி காவல்நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார்.

காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதுல் கூறிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், பட்டாசு ஆலை பராமரிப்பு ஆய்வுக்குழு கூடிய விரைவில் அனைத்து பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளும் என்று செய்தியார்களிடம் தெரிவித்தார்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.