Fri. Nov 22nd, 2024

[புதுச்சேரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தார். அவரை முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, அரசு விழாவில் பங்கேற்ற மோடி, ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நெய்வேலியில் ரூ.8,000 கோடி மதிப்பிலான அனல்மின் திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை அருகே மப்பேட்டில் சரக்குகளை கையாள புதிய பூங்கா

ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழ்நாட்டிற்கு நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்/ பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மேம்பாடு அளிக்கும் திட்டம் ஆகும். நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு துணை நிற்கும். உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுஉண்டு பின்செல் பவர் என்ற திருக்குறனை மேற்கோள் காட்டி, விவசாயத்தின் பெருமைகளையும், உழவர்களின் தியாகத்தையும் எடுத்துக் கூறினார், பிரதமர் மோடி.

திட்ட விவரம்

நெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு. பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மேம்பாடு அளிக்கும் திட்டம் ஆகும்: பிரதமர்நெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.

திருப்பூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்ட 4144 குடியிருப்புகள் திறப்பு,

திருப்பூர்-வீரபாண்டியில் கட்டப்பட்ட 1280 அடுக்குமாடி குடியிருப்புகள்,திருக்குமரன் நகரியில் கட்டப்பட்ட 1248 குடியிருப்புகள், மதுரை-இராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள், திருச்சி-இருங்களூரில் கட்டப்பட்ட 528 குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன

முன்னதாக, கோவை கொடிசியா மைதானத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.