தமிழநாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ், இரண்டு ஆண்டு கால பணியை நிறைவு செய்து, இன்று (ஜுன் 30 )ஓய்வுப் பெற்றார். தலைமைச் செயலகத்தில் இருந்து தமது பணியை நிறைவு செய்து இல்லம் திரும்பிய அவரை, புதிய தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா ஐஏஎஸ், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன் ஐஏஎஸ் மற்றும் உயர் அதிகாரிகள் நெஞ்சம் நெகிழ வழியனுப்பி வைத்தனர்.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியுடன், தலைமைச் செயலக அதிகாரிகளின் அன்பு வழியனுப்பை ஏற்றவாறு புறப்பட்டார்.
முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் நேர்மை, எளிமை, அதிகார தோரணையில்லாமல் அனைவருடன் பழகும் நற்குணம் ஆகியவற்றை நினைவுக்கூர்ந்து, பிரபல ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டு காலம் தலைமைச் செயலாளராக பணியாற்றிய காலத்தில், முதல் அமைச்சர் என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தாமல் மிகுந்த ஜனநாயகத்துடன் தமிழ்நாடு அரசின் உச்சபட்ச அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சுதந்திரமாக அமைத்து கொள்ள அனுமதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளரின் நற்குணங்களை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு, பல்துறை ஆற்றல் கொண்டு வெ.இறை அன்பு ஐஏஎஸ், அரசுப் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றிருந்தாலும் கூட தமிழ்நாட்டிற்கும் மனித குல மேம்பாட்டிற்கும் தொடர்ந்து அருந்தொண்டாற்றி வர வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலின் முழு விவரத்தை வாசிப்போம்…