Wed. Apr 24th, 2024

ஆளுநர் மாளிகையில் நெய் வாசனையோடு மணமணக்கும் சிக்கன், மட்டன் குழம்புகள்…

தமிழிசையால் புதுச்சேரி தமிழர்களுக்கு வேதனைதான் மிச்சம்…

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் சர்வ வல்லமை படைத்தவையாக இல்லை..

ஆளுநர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள், ஜனநாயகத்தின் மாண்பை குறைக்க கூடாது என்று உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

சுதந்திர இந்தியாவில், ஆளுநர் பதவிகளை அரசியலாக்கியது காங்கிரஸ் கட்சி தான் என்ற குற்றச்சாட்டு, அனைத்து மாநிலங்களிலும் ஆவேசமாகவே எழுந்தது வரலாறாகும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிராந்திய அரசியல் கட்சிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தன. ஆட்சிக் கலைப்பு என கொடூர கரங்களை காட்டிய காங்கிரஸின் கரங்களில் படிந்த ரத்தக்கறைகள் இன்றைய தேதி வரை அசிங்கமான அடையாளமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸைப் போல, பாரதிய ஜனதாவிற்கும் அதிகார வெறி அதிகமாகதான் இருக்கிறது. 2014ல் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, கடந்த பத்தாண்டுகளாக, பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் பிராந்திய அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு கடும் நெருக்கடி கொடுப்பதற்கு ஆளுநர் பதவிகளைதான் முழுமையாக பயன்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றமே அண்மையில் ஒன்றிரண்டு வழக்குகளின் போது கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது.

வடமாநில அரசுகள் மட்டுமல்ல, தென் இந்தியாவைச் சேர்ந்த அரசுகளும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால், அரசு நிர்வாகத்தை முறையாக நடத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவில் ஆளுநரால், கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு கடும் சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியால், திமுக ஆட்சிக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வரிசையில், பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநிலத்திற்கு முழுநேர ஆளுநராகவும் புதுச்சேரி மாநிலத்திற்கு பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்து வரும் நேரத்தில், அவருமே அரசியல் சிந்தனையோடுதான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பலமாகவே எழுந்து நிற்கிறது.

இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கும் தமிழிசையை, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களே வெறுக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவலாக இருக்கிறது.

அதுவும் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள புதுச்சேரி மாநிலத்தில், ஒட்டுமொத்த மக்களாலும், குறிப்பாக பெண்களால் வெறுக்கப்படும் ஆளுநராகவும் தமிழிசை இருக்கிறார் என்பதுன் தேசிய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் அக்னி வாதமாக இருக்கிறது.

ஆளுநர் தமிழிசையால், புதுச்சேரி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளையும் பட்டியலிட்டு கடுமையாக விமர்சனம் செய்கிறார் மூத்த பத்திரிகையாளர் மதி மகாராஜன்..இவர், புதுச்சேரி மாநில பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் ஜனநாயகத்திற்கு முக்கிய பங்காற்றி வருவால் துணைநிலை ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அர்த்தம் பொருந்தியவையாக இருக்கிறது.

ஆளுநர் தமிழிசை மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முழுமையாக காண்பதற்கு நல்லரசு யூ டியூப்பை வலையொளியை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.