தாரை இளமதி., சிறப்புச் செய்தியாளர்..
கழிசடையாக மாறிவிட்ட சவுக்கு சங்கர் பற்றியெல்லாம் திரும்ப திரும்ப கூறவேண்டியிருக்கிறதே என்ற விரக்தி தலை தூக்கினால், ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கே சாபக்கேடாக மாறியிருக்கும் சவுக்கு சங்கரை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வெறிதான் அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டெல்லி ஊடகவியலாளர் ஒருவரிடம் பேசியதை, டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வழக்கம் போல எலும்பு துண்டுகளை வீசியெறியும் தனது எஜமானர்களுக்கு வாலாட்டியிருக்கிறார் சவுக்கு சங்கர்.
மனிதராக கூட வாழ்வதற்கு தகுதியில்லாத சவுக்கு சங்கர், ஈனப்பிறவி என்று சொல்வதற்கு இந்த ஒரு நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டினால் போதும் என்பதுதான் நல்லரசுவின் விருப்பமாக இருக்கிறது.
மதன் ரவிச்சந்திரனின் ஸ்டிங் ஆப்ரேஷனை பற்றி படுகேவலமாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர், மாதேஷ் ஒரு குழந்தை. அவனுக்கு சரக்கை ஊற்றி கொடுத்துவிட்டு, அவன் உளறியதை எல்லாம் வீடியோவாக பதிவு செய்து, ஸ்டிங் ஆபரேஷன் என்று சொல்வது எவ்வளவு கேவலமானது. மதன் ரவிச்சந்திரனின் செயல்கள் எல்லாம் மிகவும் தரம் தாழ்ந்தவை என்று ரொம்பவே நொந்து கொண்டு யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த யோக்கியர்தான் சவுக்கு சங்கர்..
அவரின் இந்த விமர்சனம், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சை வெளியிட்ட ஆங்கில ஊடகவியலாளர் மற்றும் சவுக்கு சங்கருக்கு பொருந்தாதா ?என்பதுதான் நல்லரசுவின் கேள்வியாக இருக்கிறது.
நிதியமைச்சர் பேசியதை பற்றி மார்ச் 19 ஆம் தேதி சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றுகிறார். அப்போது, நிதியமைச்சரின் ஆங்கில பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. மறுநாள், அதாவது மார்ச் 20 ம் தேதி காலை தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆடியோ பேச்சுக்கு, தமிழில் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதேசமயம், சவுக்கு சங்கருக்கு வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரது டிவிட்டர் பக்கத்தில் கூட டெல்லி ஆங்கில ஊடகவியலாளர் ஆடியோ வெளியிடப்படவில்லை.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான விவகாரத்தை தமிழ்நாடு பாஜகதான் பெரிதப்படுத்த வேண்டும். அதிமுக அடக்கியே வாசிக்கட்டும் என்பதுதான் சவுக்கு சங்கரின் அஜென்டாவாக இருந்தது என்கிறார்கள் நல்லரசுவோடு நட்பில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
பிடிஆர் வெளிப்படுத்தியதாக கூறப்படும் தகவல்கள் எல்லாம் புதிய விடயங்களே இல்லை. சவுக்கு சங்கர் போன்ற பொறுக்கிகள் தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டு இருப்பவைதான்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது ?. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி பல நூறு கோடி ரூபாய் பணம் வந்தது-?… அமைச்சர் உதயநிதி என்ன தொழில் செய்தார். ?ஆயிரம் கோடி ரூபாயில் ரெட்ஜெயன்ட் மூவிக்கு சொத்து சேர்த்தது எப்படி? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
சவுக்கு சங்கருக்கு ஒரு ..ரும் தெரியாது. மாறன் குடும்பத்தினருக்கும் கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, சன் டிவி பங்குகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அளவுக்கு கலைஞருக்கு பங்கு பணம் கிடைத்தாக 2008 ஆம் ஆண்டிலே தகவல் வெளியானது.
அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு சென்னை மற்றும் புறநகரில் வீட்டு மனை வாங்கியிருந்தால், இன்றைக்கு அதன் மதிப்பு கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கும்.
அதேபோல, வேளச்சேரியில் பங்களா கட்டி மு.க.ஸ்டாலின் குடியேறிய நேரத்தில், அதன் சொத்து மதிப்பிற்கு கணக்கு கேட்ட போது, வருவாய் பற்றிய விபரங்களை மு.க.ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நேரத்தில், சன் டிவியில் இருந்து துர்கா ஸ்டாலினுக்கு மாதந்தோறும் பல லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தகவலும் வெளியானது. சன் டிவியில் ஆலோசகராக பணியாற்றிக் கொண்டிருந்தார் துர்கா ஸ்டாலின் என்றும் அதற்காக மாதந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டது என்றும் விளக்கம் வெளியிடப்பட்டது.
மு.க.ஸ்டாலினுக்கும், துர்கா ஸ்டாலினுக்கும் கிடைத்த வருவாயை, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால், கடந்த பத்தாண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயாக இன்றைய தினம் உயர்ந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன். இந்த ஒரு தகுதி போதாதா.. சபரீசன் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் தேவையான பணம் எளிதாக கிடைத்து விடும் என்பது. இந்திய திருநாட்டில் சாதாரண குடிமகனுக்கு உள்ள உரிமையை போல, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு சட்டப்படி கணக்கு காட்டுவதும், வரிமான வரி செலுத்துவதையும், ஈனப் பிறவி சவுக்கு சங்கருக்கு எல்லோரும் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன?..
இவ்வளவு குரைக்கிற சவுக்கு சங்கர், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது.?. ஒவ்வொரு நாளும் மிதுன் என்ன செய்கிறார்.? எங்கே போகிறார்.? கழிவறையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்? என்பதை எல்லாம் யூ டியூப்புகளுக்கு பேட்டியாக கொடுக்கிற ஆண்மை இருக்கிறதா..?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, மு.க.ஸ்டாலின் இவ்வளவு ஊழல் செய்து பணம் திரட்டுகிறார். சபரீசன், சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் ஆபிஸ் திறந்து லஞ்சப் பணம் வசூலிக்கிறார். திமுக ஆட்சியில் கொள்ளையடிக்கும் பணத்தை உதயநிதி, திரைப்படங்களை எடுத்து கறுப்பை வெள்ளையாக்குகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர். உடல் முழுவதும் விஷமாகிப் போன சவுக்கு சங்கருக்கே இவ்வளவு தெரிந்திருக்கிற போது, திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான கொள்கை நிலைபாடு கொண்ட மத்திய பாஜக அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது..
வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிற சவுக்கு சங்கர் போன்றவர்கள்தான், நாள்தோறும் 50 கோடி ரூபாய் வசூலிக்கிறார் சபரீசன் என்றார்கள். இப்படிபட்ட அவதூறுகளை பலமுறை கேட்கும் அப்பாவி மக்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், ஆளும்கட்சி பிரமுகர்கள் என பலதரப்பினர் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் பல ஆயிரம் கோடி சம்பாதித்துவிட்டார் என்று பேசி வருவதை, அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் கேட்காத நாளே இல்லை என்று கூறலாம்.
முதல்வர் குடும்பம் மட்டுமா சம்பாதிக்கிறது.. அமைச்சர்கள் சம்பாதிக்கிறார்கள். எம்எல்ஏக்கள் சம்பாதிக்கிறார்கள். ஆளும்கட்சி பிரமுகர்கள் சம்பாதிக்கிறார்கள் என்ற பேச்சு, ஊருக்குஊர் கேட்டு கொண்டே தான் இருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தவிர்த்து, அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ள மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்பட பல அமைச்சர்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசும்போது கூட, பத்திரிகைகளில், சமுக ஊடகங்களில் வரும் தகவல்களை வைத்துக் கொண்டு, இதெல்லாம் உண்மையாகதானே இருக்கும் என்று பேசியதாக கூட தகவல்கள் உண்டு.
திமுக ஆட்சிக்கு எதிராக ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சவால்விட்டு, புதிய சினிமா வெளியாவதற்கு முன்பாக டீஸர், போஸ்டர், பர்ஸ்ட் டிராக் என பல வித்தைகளை காட்டுவதைப் போல, பல நாட்களாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, பிடிஆர் பேசிய ஆடியோ தகவல்கள் ஏன் முன்கூட்டியே கிடைக்கவில்லை.
30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதல்வர் குடும்பம் சுருட்டியிருக்கிறது என்ற லட்டு போன்ற தகவலையே, சொத்து பட்டியல் வெளியிட்ட அன்று கூறி, திமுக அரசை விழி பிதுங்க வைத்திருக்கலாமே..கே.அண்ணாமலையைவிட சவுக்கு சங்கர்தான் மிகச்சிறந்த நரி என்பது டெல்லி ஆங்கில ஊடகவியலாளருக்கு தெரிந்திருக்கிறது என்பதுதானே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டு கழிசடைகளின் துர்நாற்றத்தை உணர்ந்து கொள்வதற்கு, அரிய சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.
மிகவும் நம்பிக்கையான ஊடகவியலாளர்களிடம் பல தகவல்களை ஆப் த ரெக்கார்டாக மூத்த அரசியல் தலைவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். அவையெல்லாம் செய்தியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கூட அவர்களிடம் இருக்காது. ஆட்சியோ., கட்சியோ தடம் மாறி போய்விடக் கூடாது என்ற நோக்கம், அந்த தகவல்களில் முதன்மையாக இருக்கலாம். மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்து விடக் கூடாது என்ற ஆதங்கமாகவும் கூட இருக்கும். ஆப் த ரெக்கார்டாக கூறுகிற அனைத்து விஷயங்களும் கூட உண்மையாகவே இருக்கும் என்பதை கூட உறுதிபடுத்த முடியாது. கேள்விப்பட்டது., அறிந்தது, தெரிந்து கொண்டது, கவனத்திற்கு வந்தது என்ற வகையில்தான் ஆப் த ரெக்கார்ட்டின் பேச்சுகள் அமைந்திருக்கும்.
தான் நம்பும் ஒரு ஊடகவியலாளரிடம் ஒரு அரசியல்வாதியோ, அமைச்சரோ, அரசு உயர் அதிகாரியோ பேசும் எந்தவொரு விடயத்தையும், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட ஊடகவியலாளர்கள் ஒருபோதும் வெளியிட மாட்டார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் அரசியல் தலைவர்கள் பலர் ஆப் த ரெக்கார்டாக பேசிய அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. பல தலைவர்களின் பேட்டிகளுக்கு இடையே கூறிய பல தகவல்கள், ஆடியோவாகவே பதிவு செய்யப்பட்டது இப்போதும் என்னிடம் பாதுகாப்பாகவே இருக்கிறது. ஊடகவியலாளர் மீது நம்பிக்கை வைத்து கூறப்படும் எந்தவொரு தனிப்பட்ட விஷயத்தையும், பொது வெளியில் வெளிப்படுத்துவது என்பது, ஊடகத்தர்மத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.
பிடிஆர் பேசிய ஆடியோ உரையாடலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மீது எல்லாம் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. ஆர்.என்.ரவி, அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நல்லவர்களாவும் புனிதர்களாகவும் ஆளுமைமிகுந்த தலைவர்களாகவும் போற்றி பாடி, வயிற்றை கழுவிக் கொண்டிருக்கும் சவுக்கு சங்கர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
பிடிஆர் எந்த ஊடகவியலாளரிடம் பேசினாரோ.. அந்த ஊடகவியலாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சமூக ஊடகங்களில் பிடிஆரின் ஆடியோவை வெளியிட்டு இருந்தால் கூட, பொதுநலன் சார்ந்தது என்று அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கலாம். அந்த ஊடகவியலாளரின் செயலை நியாயப்படுத்தியிருக்கலாம்.
ஆனால், வாழ்க்கையையே எச்சில் இலை போல மாற்றிக் கொண்டிருக்கும் சவுக்கு சங்கரிடம் கொடுத்து, பகிர்ந்து வைத்திருக்கிற அந்த டெல்லி ஆங்கில ஊடகவியலாளரின் பிறப்பை பற்றிதான் மிகவும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.
தரம் குறைந்த போன ஊடகவியலாளர்களால், புரோக்கர்களுக்கு எல்லாம் அறச்சீற்றம் வருகிறதே என்பதை நினைத்தால்தான் ஊடகவியலாளர் என்று கூறிக் கொள்வதற்கே அவமானமாக இருக்கிறது.
சவுக்கு சங்கரைப் போல இன்னொரு கோமாளி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல.. மாரிதாஸ்தான்.
தமிழ்நாடு அரசில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில் பத்து சதவீதம் பேர், அதாவது 15 ஆயிரம் பேர், பணியிட மாற்றம் பெறுவதற்காக அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கிறார்கள். அந்த கணக்கை வைத்து பார்த்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு பதினைந்து ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சமாக கிடைத்திருக்கும் என்று அவரும் ஒரு உருட்டி, பிடிஆர் கூறியதாக கூறப்படும் 30 ஆயிரம் கோடி ரூபாய் தொகை உண்மைதான் என்பதை நிரூபிப்பதற்கு ஒரு பக்கம் கூவிக் கொண்டிருக்கிறார்.
ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நினைத்தால் ரத்தக்கண்ணீர்தான் வருகிறது…