Sat. Nov 23rd, 2024

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்த சசிகலா நடராஜன், தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியா இல்லத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

கடந்த 13 நாட்களாக வெளியிடங்களுக்கு எங்கும் செல்லாத அவர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதே இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், சமத்துவ கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அவரது மனைவியும் நடிகை ராதிகாவுடன் சென்று சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

இதேபால, திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவும் சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,

சாதனை தமிழச்சியை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் சந்தித்தேன். ஒற்றை தமிழ் பெண்மணியாக சோதனைகளை தாங்கி நிற்கும் பெண்மணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன் என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.