வன்னியர் சங்கம் உதயமான நாளையொட்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்நாட்டில் பிரிந்து கிடந்த வன்னியர் அமைப்புகளை ஒன்றுபடுத்தி வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாள் இன்று. வன்னியர்களின் சமூகநீதி பயணத்தில் கடந்த 42 ஆண்டுகளில் எட்டப்பட்ட மைல்கற்களின் எண்ணிக்கை குறைவு… இன்னும் எட்டப்பட வேண்டிய எல்லைக் கற்களின் எண்ணிக்கை மிக அதிகம்!(1/4)— Dr S RAMADOSS (@drramadoss) July 20, 2022 சமூகநீதிப் பயணத்தில் 42 ஆண்டுகளாக என்னுடன் பயணிக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் 43-ஆவது ஆண்டு தொடக்க நாளில் வாழ்த்துகள்! சமூக நீதியை வென்றெடுப்பதற்கான போரில் துப்பாக்கி குண்டுகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.(2/4)#SocialJustice— Dr S RAMADOSS (@drramadoss) July 20, 2022 சமூக அநீதியாளர்களால் சதி செய்து தடுக்கப்பட்ட 10.50% இட ஒதுக்கீட்டை விரைவாக மீட்டெடுக்க வேண்டியது தான் நமது உடனடி கடமை. அதற்காக ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சிகளில் நமக்கான வெற்றிக்கனி பறித்து விடும் தொலைவில் தான் உள்ளது!(3/4)#MBCV— Dr S RAMADOSS (@drramadoss) July 20, 2022 வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க நாம் சாதிக்க வேண்டியவை ஏராளம்… ஏராளம். அவை அனைத்தையும் ஒன்று பட்டு வென்றெடுப்பதற்காக உழைக்க இந்த நன்னாளில் பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!(4/4)#VanniyarSangam— Dr S RAMADOSS (@drramadoss) July 20, 2022 Post navigation செஸ் ஒலிம்பியாட்; பிரதமர் மோடி வருகை- நேரில் அழைப்பிதழ் வழங்கினார் வெ.இறையன்பு ஐஏஎஸ்… இலங்கைக்கு 16,595 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் அனுப்பி வைப்பு….