Fri. Mar 29th, 2024

நாடு முழுவதும் பண மோசடியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள், வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறைக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன.

அதன்பேரில் அமலாக்கத்துறையும் வருமானத்துறையும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து வருகின்றன. தொடர் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகளின் அடிப்படையில், உரிய நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையும் முடுக்கி விடப்படுகின்றன.

அதற்கு முன்னதாக, சோதனை நடத்தப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளிலும் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக கடந்த டிசம்பர் மாதம் சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லாட்டரி மார்டினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த சிபிஐ., தொடர் விசாரணையில் முடிவில் 910 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கிடைத்தாகவும், அந்த பணத்தை 40 நிறுவனங்களில் முதலுடு செய்யப்பட்டிருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைப்பெற்றிருப்பதை உறுதி செய்ய அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதன் முடிவில் 119 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாகத்துறை முடங்கியது. இதற்கு முன்பாகவும் இதே குற்றச்சாட்டில் மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான சொத்துகளை முடங்கியதை அடுத்து, மொத்தமாக ரூ.277.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியது.

இதனைத்தொடர்ந்து இதே வழக்குகளில் அடுத்த கட்ட நடவடிக்கையாக லாட்டரி மார்டினின் ₹173 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சோத்துகளை தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

ஆக மொத்தத்தில், 450.69 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் பல சொத்துகள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, இந்தியன் வங்கியில் கடனாக பெற்ற பணத்தை திரும்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸிற்கு சொந்தமான ₹234.75 கோடி சொத்துகளையும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது!