வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்கப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்..
அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஜூன் 9ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பொது விநியோகத் திட்டப் பணியாளர்களுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக, மாற்று பணியாளர்களை கொண்டு நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ” No work No pay” என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்ளின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.