Fri. Apr 26th, 2024

மேயர் இல்லத்திற்கு தீ வைப்பு…பற்றி எரிகிறது கொழும்பு…. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் என அதிர்ச்சித் தகவல்…..

ஒரு மாதத்திற்கு மேலாக இலங்கையில் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே. முன்னதாக அவரது ஆதரவாளர்கள் கொழும்பு நகரில் அராஜக ஆட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், பொங்கி எழுந்து திருப்பி தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, கொழும்பு நகரெங்கும் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபக்சேவைப் போல, அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபச்கேவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை மக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில், ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரலாவை போராட்டக்காரர்கள் அடித்தே கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், எம்பி அமரகீர்த்தி வாகனத்தை தடுத்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அதை கண்டு ஆத்திரமடைந்த அமரகீர்த்தி, போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், அமரகீர்த்தியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்து அமரகீர்த்தி உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மொரட்டுவா மேயர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதையடுத்து, அந்த பகுதிக்கு சிங்கள போலீசாரும், ராணுவப் படையும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் மும்முரம் காட்டியது.
கொழும்பு நகரில் ராஜபக்சே ஆதரவாளர்களை, இலங்கை மக்கள் விரட்டி விரட்டி தாக்கி வருகின்றனர். அவர்கள் பயணித்த பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை சூழ்ந்து கொண்டு போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதால், கொழும்பு நகரமே யுத்த பூமி போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. நிட்டாம்புவா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தலைநகர் கொழும்புவில் மூண்டுள்ள கலவரம், இலங்கை முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. கண்டி நகரிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த நகரில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து, கலவரத்தை ஒடுக்க காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள போலீசார் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இலங்கை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையும், கலவரமும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ராஜபக்சே பதவி விலகலையும் இலங்கை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காலி முகத் திடலில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள், வாழ்த்து முழக்கங்களை எழுப்பி, ராஜபக்சே பதவி விலகலால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெற்றிக் களிப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

4 thoughts on “மக்கள் போராட்டத்திற்கு பணிந்தார் ராஜபக்சே… பிரதமர் பதவியில் இருந்து விலகல்… ஆளும்கட்சி எம்பி மரணம்… இலங்கையில் கலவரம் உச்சக்கட்டம்…”
  1. Hello, i think that i saw you visited my site so i came to “return the favor”.I am trying to find things to enhance my site!I suppose its
    ok to use some of your ideas!!

  2. Please let me know if you’re looking for a author for your site.
    You have some really great articles and I think I would
    be a good asset. If you ever want to take some of the load off, I’d absolutely love to write some content for your blog
    in exchange for a link back to mine. Please shoot me an email if interested.
    Kudos!

Comments are closed.