Sat. Nov 23rd, 2024

சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.. சட்டமன்றத் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், 136 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன் முக்கிய விவரம்:

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 1.74 லட்சமாக உயர்த்தப்படும்..

19 அரசு மருத்துவமனைகள் ரூ.1018.85 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

தென்காசி அரசு மருத்துவமனை ரூ.10 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

தமிழகம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நவீன நுண் கதிர் அறை ரூ.1.90 கோடி செலவில் கட்டப்படும்.

தமிழகத்தில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்கான நவீன உபகரணங்கள் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும்.

திருவண்ணாமலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கித் திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும்.

எலிக்கொல்லி பசையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.