காந்தி சிலை தரமற்ற முறையில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்…
கரூரில் மையப் பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டு பழமையான காந்தி சிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியினரால் அமைக்கப்பட்ட அந்த மார்பளவு சிலை, சேதமடைந்ததாக கூறி,அதனை அகற்றிவிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு உருவச் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதிய காந்தி சிலையை நாளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், காந்தி சிலை நிறுவதற்காக அமைக்கப்படும் பீடம் உள்ளிட்டவை தரமற்ற முறையில் இருப்பதாக கூறி, புதிய சிலை நிறுவது தொடர்பாக உரிய அரசாணை வெளிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்டோரும் களத்திற்கு வந்தனர். இதனால், அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு ஜோதிமணி எம்.பி.யிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவரை வலுக்கட்டயமாக மகளிர் காவலர்கள் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.