பொதுமக்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து ள்ளார்..இந்த விவகாரத்திலும் பல மாதங்களுக்கு முன்பே கோரிக்கை விடுத்ததை நினைவுக்கூர்ந்து அதுதொடர்பான தனது முந்தைய பதிவையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்…
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்..
வெற்று அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்..
திமுக கோரிக்கையை காலந்தாழ்த்தியேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு உள்ளது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..