Mon. May 6th, 2024

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதேபோல, புதிய வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் லிம்கோ வரையிலான தொலைவுக்கும் அதிக கட்டணம் விதிக்கப்பட்டதற்கு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து வசூலிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:

2 கிலோமீட்டர் வரை 10 ரூபாய் கட்டணம் என்பதில் மாற்றமில்லை .

2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த கட்டணத்தில்  5 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும், 6 முதல் 12 கிலோமீட்டர் வரை 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

12 முதல் 18 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 21 கிலோமீட்டர் வரை 40 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம்.