Sun. Nov 24th, 2024

நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 70,000 மெட்ரிக் டன் நெல் சேதமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும், நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது.

கோடைகால தொடர் மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உணவு அமைச்சர் விளக்கம்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

5 நாட்களாக சூறை காற்றுடன் கோடை மழை பெய்து வருகிறது.

கோடை மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது.

மழையால் நனைத்த நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளன.

நேரடி கொள்முதல் நிலையங்களை புதிதாக உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆன் லைன் மூலம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.