Wed. May 22nd, 2024

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளும், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளும் சரிவர பின்பற்றப்படுவதில்லை எனவும், அணையை பலப்படுத்தும் பணிகளை செய்ய கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அணையின் மேற்பார்வை கண்காணிப்பு குழு தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால், மேற்பார்வை குழுவின் தலைவரை மாற்றக்கூடிய சூழல் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

மேலும், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அனைத்து விவகாரங்களிலும் மேற்பார்வை குழு முடிவு செய்யும் எனக்கூறிய நீதிபதிகள், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.