அரசு முறைப்பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நான்காம் நாளான இன்று அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டார். வியப்பில் ஆழ்த்தும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருக்கும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவை என வியந்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவேற்றுள்ளார்.
அதன் விவரம்:
துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது.
பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுப்படுத்துவதும் கூட அதன் பணி என #MuseumOfTheFuture காட்டியது.
போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது!
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.