Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், இரண்டாம் முறையாக வேளாண் துறை க்கான தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன் விவரம் இதோ…

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது; 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ₹5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021-22ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவில் உணரப்படுகிறது; தமிழ்நாட்டுக்கு இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்; இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பருவமழையால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

3204 கிராம பஞ்சாயத்துகளில் ₹300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

உழவர்களை கைப்பிடித்து வளர்ச்சிக்கு அழைத்துச்செல்ல ஊரகவளர்ச்சி துறையுடன் இணைந்து வேளாண்துறை பாடுபடும்.

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ₹1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3,204 கிராம ஊராட்சிகளில் ரூ.300 கோடி மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

2020-2021ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,055 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

150 வேளாண் தொகுப்புகளை 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ₹5 கோடி மத்திய அரசு – மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.

நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.

முதலமைச்சர் தலைமையில் சிறுதாணிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும்.

சிறப்பு மண்டலம்

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

நடப்பாண்டில் நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பரிசு

வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.

தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு.

சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை.

நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.

பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950 வழங்கப்படும்.

கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் அறிமுகம்.

சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.5 கோடி நிதி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்.

சீர்மிகு நெல் சாகுபடி திட்டம் ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்; சூரியகாந்தி சாகுபடி பரப்பு உற்பத்தித் திறன் உயர்த்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.

கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி.

தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ₹27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும்.

தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

உணவுப் பூங்கா

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் பிரமாண்ட உணவுப்பூங்கா அமைக்கப்படும், இதற்காக ₹381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலையை சீராக்க உற்பத்தி குறைவாக உள்ள மாதங்களில், உற்பத்தியை அதிகரிக்க மானியம் வழங்கப்படும்.

₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.

அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ₹5 கோடி ஒதுக்கீடு.

பனை மர வளர்ச்சியை ஊக்குப்படுத்த ரூ.10 லட்சம் விதைகள் விநியோகம் செய்யப்படும்.

ரூ.2.65 கோடி செலவில் பனை ஓலை தயாரிக்க பயிற்சியும் மானியமும் வழங்கப்படும்.


மாலையிலும் உழவர் சந்தை”

மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது..

உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.10 கோடியில் 10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் “தமிழ் மண் வளம்” என்ற இணையதளம் உருவாக்கப்படும்.

மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்படும்.

பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 25 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்; சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும்.

வேளாண்மை,அதுசார்ந்த பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.