Sun. May 19th, 2024

தே.மு..தி.க விருப்ப மனு அறிவிப்பு

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விருப்பமனு அளிக்கலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

“மார்ச் 5ம் தேதிக்குள் விருப்பமனுக்களௌ பூர்த்தி செய்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; பொதுத்தொகுதிக்கு விருப்பமனு கட்டணமாக ரூ.15,000, தனித்தொகுதிக்கு ரூ.10000 நிர்ணயம் எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் கைது செயப்பட்டுள்ளார்.

வெடி விபத்தில் 20 பேர் இறந்த நிலையில் உரிமையாளர் சந்தனமாரி இன்று காலை கைது செய்யப்பட்டார்

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே குத்தகைதாரர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்ப்பட்டிருந்தனர்

தேர்தல் அதிகாரி நியமனம்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண்துறை இணை செயலாளர் ஆனந்த், சுகாதாரத்துறை இணை செயலாளர் அஜய் யாதவ் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொலைக்காட்சி தொடங்க தடையில்லை.

திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியை பயன்படுத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யவும் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கிராம நூலகங்களைத் திறக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற நூலகங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப்புற நூலகங்களையும் விரைவாக திறக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அஞ்சல் வழி வாக்குக்கு அனுமதி

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல் வழியாக வாக்கு அளிக்கக் கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கம் விலை குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,380-க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.