Fri. Nov 22nd, 2024

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதன் விவரம்:

மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன்.

தமிழில் உறுதிமொழி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்துவேன்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது வேதனையளிக்கிறது.

நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில், நாமே தயக்கம் காட்டக் கூடாது – தமிழிசை சௌந்தர‌ராஜன்.

பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய மனு மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை.

என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்படுவேன் – தமிழிசை செளந்தரராஜன்.

தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை; ஆராதிக்கப்படுகிறது. இவ்வாறு ஆளுநர் தமிழிசை கூறினார்.