சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்..
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார்..இதனையடுத்து கூடுதல் பொறுப்பாக ஆந்திர ஆளுநர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது..அதனையடுத்து காலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.. கூடுதல் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.. முன்னதாக பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண்பேடியும் ஆளுநர் தமிழிசைக்கு வாழ்த்து கூறினார்…