தமிழக சட்டப்பேரவை வரும் 18 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2022 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியது:
வருகின்ற மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டம் நடைபெறும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கூட இருக்கிறது அன்று நிதி அமைச்சர் வரவு செலவு அறிக்கையை வாசிப்பார்..முக்கியமாக காகிதம் இல்லாத கூட்டமாக இது நடைபெறும்*
18ஆம் தேதி முழுமையாக நேரலை செய்யப்படும். என அப்பாவு தெரிவித்தார்
கேள்வி நேரம் பதில் நேரம் அனைத்தையுமே நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்
தேவை இருப்பவர்கள் அனைவரும் Rtpcr பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் தேவை என்றால் கூட்டத் தொடருக்கு வரும்முன் rtpcr பரிசோதனை செய்து கொண்டு வருவார்கள். என அப்பாவு .
நீட் மசோதாவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பி அதற்கு அதற்கு முழுமையான செய்தி விசாரித்த பிறகு கூறுகிறேன்.
இவ்வாறு அவைத்தலைவர் தெரிவித்தார்
சட்டப்பேரவைச் செயலாளர் பெயரில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…