Mon. Nov 25th, 2024

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் இருந்து விலகிய அவர், பா.ஜ.க.வில் இணைத்தார். அவரைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும், தனது எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகினார்.  

இதேபோல, அரசியலில் இருந்து ஒதுக்குவதாக கூறி மற்றொரு அமைச்சரான மல்லாடி கிருஷ்ணராவும், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்றைய தினம் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜான் குமாரும், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி, அதற்கான கடிதத்தை புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் சிவக்கொழுந்துவிடம் நேற்று வழங்கினார்.

நமச்சிவாயம் முதல் ஜான்குமார் வரை மொத்தம் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ், பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரெங்கசாமி தலைமையில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று துணை நிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று அங்கிருந்த அவரின் செயலாளரிடம் மனு ஒன்றை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம பேசி ரெங்கசாமி, பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்களின் பலம் முதல்வர் ரெங்கசாமிக்கு இல்லை. எனவே, அவரது தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு துணை நிலை ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.