புதுச்சேரி மாநில துணை ஆளுநர் கிரண்பேடியை, ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநில பொறுப்பை ஆந்திர மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நாராயணசாமியுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. மாநில வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் முதல்வர், கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லிச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைநேரில் சந்தித்து புகார் பட்டியல் வாசித்தார் நாராயணசாமி.
இதனைத்தொடர்நது, கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலகினர். இதனால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று புதுச்சேரி எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கிரண்பேடி, ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் கடசியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே அவர்கள் இருக்கின்றனர்.