Sat. Nov 23rd, 2024

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆதரித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆற்றிய உரை:

சிறப்பு பேரவை நடவடிக்கைகள்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற, தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று காலை கூடியது..

பேரவை துவங்கிய வடன்ஆ ளுநர் அனுப்பி வைத்த கடிதத்தில் எழுதப்பட்டது என்ன? என்பது குறித்து பேரவை த்தலைவர் அப்பாவு விளக்கினார்..

பின்னர் சபை குறிப்பில் ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதத்தை பதிவு செய்தார் அப்பாவு.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்றும் காமாலைக் கண்ணுடன் ஏ.கே.ராஜன் அறிக்கையை ஆளுநர் வாசித்துள்ளார் என்றும் பேரவை த்தலைவர் விமர்சனம் செய்தார்..

அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி

நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார் என்று கூறினார் பேரவை த்தலைவரபா அப்பாவு.

தொடர்ந்து, நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஏ.கே.ராஜன் அறிக்கையை ஆளுநர் விமர்சிப்பது அரசியல் சாசனப்படி சரி அல்ல.

மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் கடமை.

ஏ.கே.ராஜன் குழு ஒருதலைபட்சமான பரிந்துரை அளிக்கவில்லை- புள்ளி விவர அடிப்படையில்தான் பரிந்துரைகளை வழங்கியுள்ளது..

இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.. தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆதரித்து பேசினர்..

நீட் விலக்கு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..

நிறைவாக நீட் தேர்வில் விலக்கு கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..

ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது நீட் விலக்கு மசோதா.

தமிழக சட்டமன்றப் பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..