ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்..
சென்னையில் இன்று மாலை அவர் பேசினார்.. அப்போது தேர்தல் கால அட்டவணையை அவர் வெளியிட்டார்.. அதன் விவரம்;
வேட்புமனுத்தாக்கல் 28.1.2022
வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் 04.2.2022
வேட்பு மனு பரிசீலனை 05.02.2022.
வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் 07.2.2022
வாக்குப்பதிவு நாள் 19.02.22
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் 22.02.22
தொடர்ந்து பழனி குமார் கூறியதாவது;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்; 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வெப்பநிலை பரிசோதனை கருவி, சானிடைசர், முகக்வசம் உள்ளிட்ட 13 பொருட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்படும்..
வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும்.
ஜனவரி 31 வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல். நடைபெறும்.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்..
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர், 3,468 நகராட்சி உறுப்பினர் பதவிக்கும் தேர்தல்.நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்.
தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், பறக்கும் படையினரின் விவரங்கள் நாளை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்..