தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
பிரதமர் – முதல்வர் பங்கேற்பு
விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர, நாகை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கல்லூரிகளின் திறப்பு விழா ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது..கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
புதிய 11 மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1450 இடங்கள் உள்ளன
இதேபோல், சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு நிறுவன கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என துவங்கி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்..மேலும் அவர் கூறியது:
முதல் முறையாக ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை உ.பியில் சில நாட்களுக்கு முன்னர் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தேன்
தமிழகத்தில் மேலும் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து என் சாதனையை முறியடித்துள்ளேன்
7 ஆண்டுளில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது..இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்..
நீட் தேர்வு விலக்கு
முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள்.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு
மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும்
என்பதே எங்களது கொள்கை.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..
உரையின் நிறைவில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்..