Fri. Nov 22nd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு அரசு கைது செய்த விதம் ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது..

அவரின் ஜாமீன் மனு மீதான விவாதம் இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை க்கு வந்தது..அப்போது ராஜேந்திர பாலாஜி விவகாரத்தை ஒருதலைபட்சமாக நீதிபதிகள் அணுகக் கூடாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்டார் அரசு வழக்கறிஞர்..

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாங்கள் ஒருதலைப்பட்சமாக அணுகுகிறோம் என்றால் கடந்த வாரமே அவருக்கு நாங்கள் ரிலீப் கொடுத்திருப்போம் என்று பதிலளித்தனர்.

ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த வாரமே ஜாமின் வழங்கியிருப்போம், தமிழ்நாடு அரசின் வாதத்தை கேட்கவே அவகாசம் அளித்தோம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்..

நிபந்தனை ஜாமீன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; வெளியூர் செல்லக்கூடாது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார் வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.