இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அஷ்வின் ஐந்து விக்கெட் அள்ளினார்.
195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் இந்திய அணி வீரர்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள்.
7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் கை கோர்த்தார். இருவரும் அபாரமாக விளையாடினார்கள். விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அஷ்வின் அபாரமாக விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். பன்னாட்டு கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும்.
இந்திய அணியின் அஸ்வின் அடித்த அபார சதம் மூலம் இங்கிலாந்துக்கு வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.