கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்..
இதனையடுத்து அந்த மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்..
மிக கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
நாளை கன்னியாகுமரி , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
நாளை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை தொடரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..