Fri. Apr 11th, 2025

தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்..

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.. அதன் விவரம் வருமாறு :இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர் –

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை – .

இலங்கை வசம் இருக்கும் சுமார் 300 படகுகளை இதுவரை திரும்பப் பெற்றோம் –

7 உட்பிரிவுகளை சேர்ந்தோர் இனி தேவேந்திரகுல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் –

7 உட்பிரிவுகளை சேர்ந்தோரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் அரசியல் சாசன திருத்தம் நிறைவேற்றப்படும்
தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்புக்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி.

தேவேந்திர என்கிற பெயர் எனது பெயரான நரேந்திரவுடன் இசைந்து வருகிறது-.

தேவேந்திர குல வேளாளர் எனும் அறிவிப்பு வெறும் பெயர் மாற்றம் அல்ல –

பெயர் மாற்றம் மூலம் 7 உட்பிரிவினருக்கு மதிப்பு மற்றும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி கொடுத்துள்ளது.

நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவத்தை கொண்டாடுபவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் –

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்..

பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.