ஜெய்பீம் திரைப்படம், திரையுலக ரசிகர்களை மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1993 ஆம் ஆண்டில் நேரிட்ட உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜெய்பீம், கண்ணியமிக்க காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
காவல்துறையின் வெறியாட்டத்திற்கு அப்பாவி மக்கள் பலியாகும் கொடிய நிகழ்வுகள், 1993க்கு முன்பும், பின்பாகவும் நிறைய நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும், ஜெய் பீம் திரைப்படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ள சூர்யாவின் மனிதநேயத்தின் மீதும், பார்வதிக்காக வாதாடிய அல்லது தீரத்துடன் போராடிய ஓய்வுப் பெற்ற நீதியரசர் சந்துரு மீதும் பொதுதளத்தில் உள்ள மதிப்பும், மரியாதையும் ஜெய் பீம் படத்தை மாபெரும் வெற்றி காவியமாக மாற்றியுள்ளது என்கிறார்கள் திரையுலக ஊடகவியலாளர்கள்.
அந்த வகையில், வலைப்பேச்சு குழுவினரின் ஆத்மார்த்தமான செயல், பல லட்சம் பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்று வரும் இந்த நேரத்தில், கோடிக்கணக்கில் லாபம் பார்த்த தயாரிப்பு குழுவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் பாசமிகு நண்பரும், மூத்த ஊடகவியலாளருமான அந்தணன் உள்ளிட்ட வலைப்பேச்சு குழுவினர் வைத்துள்ள வேண்டுகோளை, தாமாக முன்வந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம் அவரின் மனிதநேயம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸின் அறிவிப்பு, விளிம்பு நிலை சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரிடமும் நெகிழ்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
நடிகர் ராகவா லாரன்ஸின் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் அறிக்கை……