Fri. Nov 22nd, 2024

கடந்த ஆண்டு வரை மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளைதான் தமிழ்நாடு உருவான நாளாக, பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு மாறாக, சட்டப்பேரவையில் மதராஸ் மாகாணம் என்று பெயரை மாற்றிவிட்டு தமிழ்நாடு என்று பெயரை, முதல் முறையாக திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அப்போதைய முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணா முன்மொழிந்து, சட்டமாக்கிய ஜூலை 18 ஆம் தேதிதான் இனிவரும் காலங்களில் தமிழ்நாடின் தினமாக (பிறந்தநாளாக) கொண்டாடப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவரின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக ஆகியவை மட்டுமின்றி, ஆளும்கட்சியான திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநில மக்களுக்கு, மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நவம்பர் முதல் தேதியையே அந்தந்த மாநிலங்களின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியும் மூன்று மாநில மக்களுக்கும், அவரவர் தாய் மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோல, ம.பி., சத்தீஸ்கர், ஹரியானா ஆகிய மாநில மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதேநாளில்தான் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் பெரும்பான்மையான வாழும் மக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணத்திற்கு மாநிலத்தின் பிறந்தநாளாக கருதி பிரதமர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் பாஜகவும், கூட்டணி கட்சியான அதிமுகவும் ஒரு நிலைப்பாட்டில் உள்ள நிலையில், பிரதமர் மோடி, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஜூலை 18 ஆம் நாளை ஏற்றுக் கொள்வதைப் போலதான் தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிக்காமல் தவிர்க்கப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகிறது என்று பெருமையாக கூறுகிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.