Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் (18 வயதுக்குட்பட்டவர்கள் நீங்கலாக) கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இதற்கான முன்னெடுப்புகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே 5 கட்டங்களாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனோ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. .

இதனைத்தொடர்ந்து நாளை (23 ஆம் தேதி) மாநிலம் முழுவதும் 50000 மையங்களில் 6 வது கட்டமாக “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.

நாளை காலை 7 மணிமுதல் இரவு வரை நடைபெறும் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் சுகாதாரத்துறை செய்து வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை காலை 7.45 மணி முதல் பெரம்பலூரில் முதல் முகாமை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து ஒதியம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

பின்னர், குன்னத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறார். அங்குள்ள சிறப்பு முகாம்களை பார்வையிட்டு, தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்தவுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் நாளைய சுற்றுப்பயண விவரம்: