அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று காலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசினர்.
அப்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும்,நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற நடவடிக்கை எடுக்கவும்,சட்டம் ஒழுங்கை காக்கவும் கோரி மனு அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாநில சட்டம் ஒழுங்குப் பிரச்னை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து துறை காவலர் தனது பணியை செய்த போது, அவரை அமைச்சரின் உதவியாளர்கள் கடுமையாக தாக்குகிறார். அதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். அதனை மிரட்டி திரும்ப பெற வைக்கிறார்கள். அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரும் புகார் திரும்ப பெறப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார்.
மக்களை பாதுகாக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை.
சசிகலா எதை சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை. சசிகலா வுக்கும் அண்ணா தி.மு.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கட்கியில் உறுப்பினரே இல்லை. தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் அன்னா தி.மு.க வின் இன்றைய நிலையை உறுதி செய்துள்ளது,
உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற அண்ணா தி.மு.கவினரை தோற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தி.மு.க வின் கை பாவையாக செயல்பட்டுள்ளது ஆலங்காயத்தில் வாக்கு பெட்டிகளை தூக்கி சென்ற தி.மு.க எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதை எல்லாம் ஆதாரத்துடன் கவர் ரைிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.