Sat. Nov 23rd, 2024

தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வெற்றி உறுதி என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் நிச்சயம் பங்கேற்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 

தேமுதிகவின் கொடி நாளையொட்டி சென்னை இல்லத்திலிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு பரப்புரை வாகனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயணம் செய்தார்.

தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் வருகை தந்த நிலையில், அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் பேசியதாவது, கூட்டணி குறித்து யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் தேமுதிக வெற்றி பெறும். கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பதை தொண்டர்கள் ஏற்பார்கள்.

தேர்தல் தேதி அறிவித்ததும் செயற்குழு பொதுக்குழுவில் கூட்டப்படும். தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் நிச்சயம் பங்கேற்பார். இன்னும் எந்த கட்சியும் கூட்டணி குறித்து பேசத் தொடங்கவில்லை.

தேர்தலுக்கு 2 மாதங்களே உள்ளதால் கூட்டணிப் பேச்சை திமுகவும் அதிமுகவும் விரைந்து தொடங்க வேண்டும். கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள், அதிமுகவிடம் கேளுங்கள். தொலைக்காட்சி விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் இனி கலந்து கொள்வர். சசிகலாவை சந்திக்க போகிறேன் என்று வெளியான செய்தியில் உண்மையில்லை. விஜயகாந்த், தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நான் தேர்தலில் போட்டியிடுவேன்..

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்…