Sun. Apr 20th, 2025

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்…

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது..

விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு:

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

சோதனை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டையில் அஇஅதிமுக நகர செயலாளர் பாஸ்கர், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஏவிஎம் பாபு, அரசு ஒப்பந்ததாரர் சோத்துபாளை முருகேசன், முன்னாள் அமைச்சர் உதவியாளர் அன்பானந்தம் மெய்வழிச்சாலையில் ஒருவர் உள்பட பல் வேறு நபர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்…