அதிமுக பொன்விழாவையொட்டி தொண்டர்கள் மத்தியில் சசிகலா செம ஜாலியாக பேசினார்..
எம்.ஜி.ஆர். பாடலை மேற்கோள்காட்டி அவர் பேசியதாவது:
கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போலாமா?-
எம்.ஜி.ஆர். விதையாக, ஜெ. மழையாக இருந்ததால் அதிமுக விருட்சமாக வளர்ந்தது.
நீரடித்து நீர் விலகாது- நெருக்கடியான சூழலிலும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டு சென்றேன்: அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது
இவ்வாறு அவர் பேசினார்…
ராமாவரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விகே சசிகலா, அதிமுகவில் அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக செயலாற்றுவேன். என்னை பற்றி விமர்சனம் செய்வதை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..
அவரின் பேட்டி இதோ;
ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார்.
என்ன புரட்சி செய்தார் சசிகலா?
அதிமுகவில் சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.
அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை.
பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்..