Thu. Nov 21st, 2024

அரசியல் வாழ்க்கை என்பது பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்காக இருக்க வேண்டுமே தவிர, விளம்பரத்திற்காகவும், பொழுது போக்குவதற்காகவும் இருக்கக் கூடாது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, பிரபலங்கள், அவரவர் துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். அரசியல் பாதைக்கு திரும்ப ரெம்பவே யோசிததார்கள். ஆனால், இன்றைக்கு ஓய்வுப் பெற்றவர்களும், பொழுது போகாமல் சும்மா வெட்டியாக இருப்பவர்கள் எல்லாம், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைந்து விளம்பரம் தேடுவதில், மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம்குமாரும் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜகவின் தலைமை . அலுவலகமான கமலாலயத்தில் ராம்குமாரும், அவரது மகனும் நடிகருமான துஷ்யந்தும் பா.ஜ.க. உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ராம்குமார்.

தனது தந்தை மறைந்த நடிகர் சிவாஜிகணேசன், தேசியமும் தெய்வீகமும் ஒன்று என்று மக்களுக்கு எடுத்துக் காட்டியவர் அவரின் பாதையிலேயே, அதே சித்தாந்தத்தை இந்தியாவில் முன்னிலைப்படுத்துபவர் பிரதமர் மோடி. அதனால்தான் நானும், எனது மகனும் பாஜகவில் இணைந்துகொண்டேன்.

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்க வேண்டும். அதைத்தான் மோடி செய்துகொண்டிருக்கிறார். பிரதமரின் தன்னிறைவு இந்தியா திட்டம் போன்ற பல திட்டங்கள் பலரையும் கவர்ந்திருக்கின்றன.

என் அப்பாவின் அரசியல் பாதை எப்படி என்று எல்லாருக்கும் தெரியும். மோடியின் வழிதான் என் வழி. எங்களைப் போலவே, எங்களது குடும்பத்து ஆதரவாளர்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தா.மரை நிச்சயம் மலரும்.

இவ்வாறு ராம்குமார் தெரிவித்தார்.