தேசிய அரசியலில் இன்று மத வழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிததுள்ள பா.ஜ.க., இந்து மதத்தை முன்னெடுப்பதில் தனியாத ஆர்வம் காட்டி வருக்கிறது. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் ஆன்மிகத்தையும், இந்து மதத்தையும் முன்னிலைப்படுத்தியே அரசியல் ஆதாயம் அடைந்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சம்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு வழங்கப்பட்டு வரும் பிரத்யேகமான முக்கியத்துவம் என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்திய அரசியலில் இந்து மதம் தொடர்பான பிரசாரம், நம்பிக்கை போன்றவை, அடிதட்ட மக்களின் மனங்களில் ஆழமாக பதித்து இருப்பதால், , நாடு முழுவதும் பா.ஜ.க.வின் வெற்றி எளிதாகிவிடுவதாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் நினைக்கத் தொடங்கிவிட்டதன் வெளிப்பாடாகதான், ராகுல்காந்தியின் அண்மை கால நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.
டெல்லியைத் தவிர்த்து பிற மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது ராகுல்காந்தி, இந்து மத கோயில்களுக்கு செல்வதிலும், மத குருமார்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டதொடங்கிவிட்டார். ஆன்மிக அரசியல்தான் காங்கிரஸை வரும் தேர்தல்களில் அரியணையில் ஏற்றும் என்று காந்தி குடும்பவே நம்புகிறது போல. அதன் வெளிப்பாடாகதான், மாசி அமாவாசை நாளான இன்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் புதல்வி பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.
மேலும், அங்குள்ள இந்து மத துறவிகையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். திடீரென்று காந்தி குடும்ப வாரிசுகள், ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்திருப்பது, சுயநலத்திற்காகத்தான் என்று பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்துவதற்குதான் காந்தி குடும்ப வாரிசுகளின் ஆன்மிக வேடங்கள் கை கொடுக்குமே தவிர, ஒட்டுமொத்த இந்து மத காவலர்களாக காங்கிரஸை ஒருபோதும் பெரும்பான்மையான மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று கிண்டலடிக்கிறார் டெல்லி மூத்த ஊடகவியலாளர்கள். அவரின் வாதத்தை உண்மை என்று சொல்லும் அளவிற்குதான் பிரியங்கா காந்தியின் புனித நீராடல் நிகழ்வை, உத்தரபிரதேச பா.ஜ.க. நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். .
எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற குழப்பம், மேல்தட்டு மககளையும் விட்டு வைக்குமா என்ன