கோயிலில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை எழும்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்து, முதற்கட்டமாக 25 பணியாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…..




முன்னதாக இன்று நண்பகரில் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு முன்னறிவிப்பு இன்றி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படுகிறதா என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ், கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும் வழிமுறைகயை எடுத்துரைத்தார். அதன் பிறகு கோரிக்கை மனுக்கள் வழங்க வந்திருந்த பொதுமக்களிடமும் முதல்வர் மனுக்களைப் பெற்று, அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.